திருவண்ணாமலைக் கோயில் ஓவியங்கள்


திருவண்ணாமலைக் கோயில் கோபுர ஓவியம்

  • திருவண்ணாமலை பதினொரு நிலைக் கோபுரத்தின் உட்புறத்தில் விசய நகர வேந்தர் தமது மெய்க்கீர்த்தியில் சிறப்பித்துக் கூறும் கஜ வேட்டைக் காட்சி சித்திரிக்கப் பட்டுள்ளது.     இவ்வோவியத்தின்     ஒரு     பகுதியில் இக்கோபுரத்தினைக் கட்டிய கிருஷ்ண தேவ ராயரின் அதிகாரி செல்லப்ப நாயக்கர் உருவமும் உள்ளது. திருவண்ணாமலைக்     கோயிலில் யானை கட்டும் மண்டபத்தில் சிவ பெருமான் உமையை மணந்த வரலாறும் பாற்கடல் கடையும் காட்சியும் வண்ண ஓவியமாக உள்ளன.

விசய நகர வேந்தர் காலக் கோயில் ஓவியங்கள்

தமிழ்நாட்டில் கி.பி.15-16 ஆம் நூற்றாண்டில் விசய நகர வேந்தர்களின் ஆட்சி நடைபெற்ற போது கோயில்களில் வரையப் பட்ட ஓவியங்கள் பல ஊர்களில் காணப் படுகின்றன.     திருவண்ணாமலை,     திருவரங்கம், திருவெள்ளறை, அதமன் கோட்டை, காஞ்சிபுரம், திருமலை, திருவலஞ்சுழி, திருப்புடை மருதூர் முதலிய இடங்களிலுள்ள கோயில்களில் விசய நகர வேந்தர் காலத்து ஓவியங்கள் காணப் படுகின்றன.

  • திருவண்ணாமலையில் உள்ள கிருஷ்ண மண்டபத்தில் திருப்பாற்கடலைக் கடையும் காட்சி, சிவன் உமையம்மையைத் திருமணம் புரியும் காட்சிகள், கோபியருடன் கண்ணன், முருகன் – வள்ளி திருமணக் காட்சி ஆகியன காணப்படுகின்றன.

 

 

 

 

 

 

 

 

 

கார்த்திகைநாதனின… திருவண்ணாமலை கோட்டு ஓவியங்கள்!

திருவண்ணாமலை நீர் வண்ண ஓவியங்கள்

  • சங்க காலத்தின் இறுதியிலிருந்து கோயில்களில் வண்ண ஓவியங்களை வரைந்து வைக்கும் வழக்கம் வந்துள்ளது. இவற்றின் தொழில் நுட்பமும் பொருளும் காலந்தோறும் மாறுபட்டுள்ளன. பல்லவர், பாண்டியர், சோழர் காலத்து ஓவியங்கள் இந்திய நாட்டின் பழமையான மரபில், அடித்தளமும் வண்ணங்களும் அதிக நாட்கள் இருக்கும் முறையில் உருவாக்கப் பட்டுள்ளன. வெண்சுதையின் மீது தீட்டப் பட்டுள்ள ஓவியங்கள் ஓவியக் கலைஞர்களின் திறமையையும் உயர் கலைத் தரத்தையும் உணர்த்துகின்றவையாய் உள்ளன. விசய நகர நாயக்கர் காலத்து ஓவியங்கள் அளவு குறைந்த, மெல்லியதான அடித்தளத்தில் மிகப் பரந்து பட்ட முறையில் தொழில் நுட்பம் குறைந்தவையாய்க் காணப் படுகின்றன. இதனால் இவ்வோவியங்கள் காலப் போக்கில் மங்கியும் அழிவுக்கு ஆளாகியும் உள்ளன.
  • தமிழ்நாட்டில் காலம் தோறும் ஓவியத்தில் இடம் பெறும் காட்சிகளின் பொருளும் காலத்திற்கு ஏற்றவாறு மாறுபட்டுள்ளது. இராமாயணம் போன்ற இதிகாசங்கள் மிகப் பழங்காலத்திலிருந்து இடம் பெற்றுள்ளன. பல்லவர், பாண்டியர், சோழர் காலங்களில் சைவத்தின் எழுச்சியைக் காட்டுகின்ற முறையில் சிவனது திருக்கோலங்களும் சைவ அடியார்களது வரலாறும் கோயில்களில் இடம் பெற்றுள்ளன. இக்காலத்தில் மறுமலர்ச்சி அடைந்த சமண சமயப் புராணக் காட்சிகளும் ஆங்காங்கே உள்ள கோயில்களில் இடம் பெற்றுள்ளன. இதனையடுத்து இறைவனது திருவிளையாடல் காட்சிகளும், கோயில் தலபுராணங்களும் சைவ நாயன்மார், வைணவ ஆச்சாரியர் வரலாறுகளும் கோயில் ஓவியங்களில் காணப்படுகின்றன. நாயக்கர், மராட்டியர் காலத்தில் இவ்வகை ஓவியங்கள் இடம் பெற்றன. எல்லாக் காலத்து ஓவியங்களும் அக்கால மக்களின் ஆடை, ஆபரணங்கள், பழக்க வழக்கங்கள், தொழில்கள், சமூக மரபுகள், சமய மரபுகள், அரசியல் நிகழ்வுகள் ஆகியவற்றைத் தெரிவிக்கும் காலக் கண்ணாடியாக விளங்குகின்றன.

 

 

 

 

 

Advertisements

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: