’கவிராட்சதர்’ என்று போற்றப் பெறும் கச்சியப்ப முனிவர்
சிவஞான முனிவரின் மாணவர். இலக்கணம், இலக்கியம், சைவ
சித்தாந்தம் என்ற மூன்றிலும வல்லவர். திருத்தணிகைப்
புராணம், பூவாளூர்ப் புராணம், பேரூர்ப் புராணம்,
விநாயக புராணம், திருவானைக்காப் புராணம், காஞ்சிப்
புராணப் பிற்பகுதி, சென்னை விநாயகர் பிள்ளைத் தமிழ்,
கச்சியானந்த ருத்ரேசர் வண்டு விடு தூது, பதிற்றுப்
பத்தாந்தாதி, திருத்தணிகையாற்றுப் படை, பஞ்சாக்கர
அந்தாதி
முதலிய நூல்களை இயற்றினார். இவருடைய
நண்பரான கடவுண் மாமுனிவர் திருவாதவூர்ப் புராணம்
பாடினார்.

Leave a comment